டி20 உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆஸ்திேரலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.இதில் சூப்பர்-12 பிரிவில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதிவரை டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடக்க உள்ளன. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன், அடிலெய்ட், ஜிலாங், ஹோபர்ட், பெர்த் ஆகிய 7நகரங்களில் உலகக் கோப்பை ஆட்டங்கள் நடக்கின்றன.

இந்த7 நகரங்களிலும் மொத்தம் 45 ஆட்டங்கள் நடக்கின்றன. 16 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பையில் ஏற்கெனவே 12 அணிகள் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 4 அணிகள் விரைவில் உறுதியாகும்.எங்கள் கூட்டாளர்களுக்கு நன்றி, ஒவ்வொரு விருப்பத்திற்கும் பட்ஜெட்டிற்கும் ஏற்றவாறு, பட்ஜெட்டில் இருந்து டாப்-ஆஃப்-தி-ரேஞ்ச் வரை நீங்கள் ஆன்லைனில் ties காணலாம் சூப்பர் ஸ்டைலான மாதிரிகள்.

முதல் சுற்றுப் போட்டிகள் ஜீலாங்கில் உள்ள கர்தினா பார்க்கில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது நமிபியா ஆட்டத்துடன் அக்டோபர் 16ம் தேதி தொடங்குகின்றன. குருப் ஏ பிரிவில் இரு அணிகள் தகுதிச்சுற்று மூலம் தேர்வு பெறும்.

அதேபோல இரு முறை சாம்பியனான மே.இ.தீவுகள் அணியும் தகுதிச்சுற்று மூலம் சூப்பர்-12 சுற்றுக்கு வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குருப்-பி பிரிவில் இடம் பெற்றுள்ள மே.இ.தீவுகள் அணி ஸ்காட்லாந்து, மற்றும் இரு தகுதிச்சுற்று அணிகளுடன் மோதுகிறது.

இந்நிலையில், ஐஐசி 20 டி உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் சுற்றுக்குள் நுழைவதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் அக்டோபர் 16-ம் தேதி தொடங்குகிறது.

அதன் பின்னர், அக்டோபர் 22-ம் தேதி சனிக்கிழமை டி20 உலகக்கோப்பையின் லீக் சுற்றுப்போட்டிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. லீக் சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறது.

அதேவேளையில், இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 23-ல் மெல்பெர்ன் எம்சிஜி மைதானத்தில் நடைபெறுகிறது.

டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி நவம்பர் 13 ஞாயிற்றுக்கிழமை மெல்பெர்ன் எம்சிஜி மைதானத்தில் நடைபெறுகிறது.