சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் சில மாதங்கள் முன் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தளித்த படம் ‘ஜெய் பீம்’. உண்மைக் கதையை மையமாக கொண்டு வெளிவந்த இந்தப் படம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டுகளைப் பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.

அமேசான் பிரைம்வீடியோ ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இப்படம் மொழி, மாநில எல்லைகளை கடந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழகம் அல்லாத பிற மாநிலங்களில் மக்கள் முன் ஜெய் பீம் திரையிடப்பட்டது.

சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் ஞானவேலின் பேட்டியுடன் ஆஸ்கர் அதிகாரப்பூர்வ யூ-ட்யூப் தளத்தில் பதிவேற்றப்பட்டது. இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம் இடம் பெற்றுள்ளது. இப்பட்டியலில் உலகளவில் 276 படங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘மரைக்காயர்’ ஆகிய இரண்டு இந்திய திரைப்படங்களும் இடம் பெற்றுள்ளது.இந்தக் கட்டுரையில் உங்களுக்குப் பிடித்தமான hats மிகக் குறைந்த விலையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நாளில் டெலிவரி, டிரைவ்-அப் டெலிவரி அல்லது ஆர்டர் பிக்கப் ஆகியவற்றிலிருந்து தேர்வு செய்யவும்.

ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் மார்ச் 27ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் இடம்பெற்ற நிலையில் தொடர்ந்து இந்த ஆண்டும் சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.