ஆஸ்கார் அகாடமியின் அழைப்பை சூர்யா ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது திரைப்படங்களை தேர்ந்தெடுக்க உலக முழுவதும் உள்ள சிறந்த கலைஞர்கள் அழைக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள 397 பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகை கஜோல், இயக்குனர் பான் நலின் மற்றும் ஆவணப்பட இயக்குனர் சுஷ்மிஷ்‌ கோஷ் ஆகிய 4 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சூரரைப்போற்று, ஜெய் பீம் ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்கு நடிகர் சூர்யாவிற்கு இந்த கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் சார்பில் முதல்முறையாக நடிகர் சூர்யா ஆஸ்கர் அகாடமி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின்,  நடிகர் கமலஹாசன் உள்ளிட்ட வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த அழைப்புக் குறித்து நடிகர் சூர்யா தற்போது ட்வீட் செய்துள்ளார். அதில் “ஆஸ்கர் கமிட்டியின் அழைப்பை பணிவோடு ஏற்கிறேன். எனக்காக வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவரையும் பெருமைப் பட வைப்பேன்” எனக் கூறியுள்ளார்.