தமிழகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் மிகவும் பிரபலமான கடை. ஆடைகள், நகைகள், வீட்டு பொருட்கள் என அனைத்திற்கும் இவர்களிடம் செல்லலாம்.

இந்த சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தில் இருந்து நடிகராக வேண்டும் என வந்தவர் தான் லெஜண்ட் சரவணன்.

இவர் தி லெஜண்ட் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

படம் பெரிய அளவில் ஹிட் இல்லை என்றாலும் ஓரளவிற்கு ஓடியது என்றே கூறலாம். அண்மையில் தான் தி லெஜண்ட் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது.

விரைவில் தனது அடுத்த படம் குறித்த தகவலை வெளியிடுவேன் என லெஜண்ட் சரவணன் கூறியிருந்த நிலையில் அவரது புதிய புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

அதாவது அவர் கொஞ்சம் தாடி எல்லாம் வைத்து புதிய லுக்கில் புகைப்படம் எடுக்க அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம லெஜண்ட் சரவணனா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.