நயன்தாரா நடிக்கும் ‘டெஸ்ட்’ படத்தின் மூலம் பிரபல பின்னணி பாடகர் சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

நடிகர் மாதவன் மற்றும் நயன்தாரா நடிக்க இருக்கும் திரைப்படம் ’தி டெஸ்ட்’. கிரிக்கெட் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சித்தார்த் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய இடத்தில் நடிக்க உள்ளனர்.

பிரபல தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் சாக்சிஸ்ரீ கோபாலன் என்பவர் இசையமைப்பாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் வெகு அரிதாகவே பெண் இசையமைப்பாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் இசையமைப்பாளர் என்ற வாய்ப்பை பெற்றுள்ள சாக்சிஸ்ரீ கோபாலன், ’தி டெஸ்ட்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஒரு நல்ல இடத்தை பெறுவார் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.