சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட அணிகளுக்கான டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலாவது இடத்திலிருந்து 3-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. மூன்றாவது இடத்திலிருந்த ஆஸ்திரேலிய அணி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஆஷஸ் தொடரில் அபாரமாக விளையாடி 4-0 என தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது. தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற இந்திய அணி, முதலிடத்திலிருந்து 3ம் இடத்திற்கு பின் தங்கியுள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி 116 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தைத் தக்கவைத்திருந்தது. அதன்பின் செஞ்சூரியனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வென்று தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது.

ஆனால், ஜோகன்னஸ்பர்க், கேப்டவுனில் நடந்த 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் அடைந்த தோல்வியால், முதலிடத்திலிருந்து 3-வது இடத்துக்கு இந்திய அணி சரிந்தது.

இந்திய அணி தோல்வியடைந்த அதேவேளையில், ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக அபாரமாக விளையாடி 4-0 என ஆஷஸ் தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி. எனவே ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறியது.

தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற இந்திய அணி முதலிடத்திலிருந்து 3ம் இடத்திற்கு  பின் தங்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவிடம் அடைந்த தோல்வி, இந்திய அணிக்கு ஐசிசி டெஸ்ட் தரவரிசை மட்டுமல்லாது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலிலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 119 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், 117 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 2ம் இடத்திலும் உள்ளன. 116 புள்ளிகளுடன் இந்திய அணி 3ம் இடத்தில் உள்ளது. ஆஷஸ் தொடரில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணி 101 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளது.