பிவி சிந்துவின் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் ஆட்டம் உட்பட முக்கியமான போட்டிகளில் இந்தியா இன்று ஒலிம்பிக்கில் ஆட உள்ளது.

2020 ஒலிம்பிக் தொடரில் இந்தியா மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த 3 நாட்களாக இந்திய அணி ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் கூட வெல்லாமல் ஏமாற்றம் அளித்துள்ளது. கடந்த சனிக்கிழமை பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு ஒரே ஒரு வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இதை தவிர இந்தியா இதுவரை பதக்கம் எதையும் பெறவில்லை. வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன் என்று பல்வேறு பிரிவுகளில் இந்தியா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. இந்திய அணி வீரர்கள் பின் வரும் போட்டிகளில் இன்று ஆட உள்ளனர்.

வில்வித்தை

ஆண்கள் 1/32 பிரிவு ஆட்டம்- தருண்தீப் ராய் vs உக்ரைன் வீரர் ஹன்பின், 7:31 AM

ஆண்கள் 1/32 பிரிவு ஆட்டம் – பிரவீன் ஜாதவ் vs ரஷ்ய கமிட்டியின் கல்சான் பாசர்ஸாபோவ், 12:30 PM

பெண்கள் 1/32 பிரிவு ஆட்டம் – தீபிகா குமாரி vs பூட்டானின் கர்மா, 2:14 PM

பேட்மிண்டன்

பெண்கள் ஒற்றையர் ஆட்டம்- பிவி சிந்து vs ஹாங்காங்கின் சியான் நாங் இ, 7:30 AM

ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் – பி. சாய் பிரனீத் vs டச் நாட்டின் மார்க் கல்ஜாவ், 2:30 PM

பாக்சிங்

பெண்கள் 69 கிலோ பாக்சிங் சுற்று – பூஜா ராணி vs அல்ஜீரியாவில் இச்ராக் சாயிப், 2:33 PM

ஹாக்கி

பெண்கள் ஹாக்கி- பிரிட்டன் vs இந்தியா, 6:30 AM

துடுப்பு படகு போட்டி

ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி – அருண் லால் மற்றும் அர்ஜுன் சிங், 8:00 AM

ஆண்கள் இரட்டையர் பிரிவு ரேஸ் 2,3, 4 – கணபதி கலப்பேண்டா & வருண் தாக்கூர், 8:35 AM