அயர்லாந்துக்கு எதிரான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

அயர்லாந்து செல்லவுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் (ஜூன் 26, 28) கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பர்மிங்காம் டெஸ்ட் போட்டிக்கு தயாராக விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் செல்ல இருப்பதால், கேப்டனாக ‘ஆல்-ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா, துணை கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது நடக்கும் தென் ஆப்ரிக்க ‘டி-20’ தொடருக்கு துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா உள்ளார்.

தென்னாப்பிரிக்க தொடரில் பங்கேற்ற பல வீரர்களும் இதில் அடங்கியுள்ளனர். காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த சூர்யகுமார் யாதவ் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். இதே போல ஐபிஎல் தொடரில் கலக்கிய ராகுல் திரிபாதி முதல் முறையாக இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணி: ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), புவனேஷ்வர் (துணை கேப்டன்), இஷான் கிஷான், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), யுவேந்திர சகால், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.