94-வது ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்திய ஆவணப்படமான ‘ரைட்டிங் வித் ஃபயர்’ முதன்முறையாக தேர்வாகி உள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், வெளியான திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவில் வரும் மார்ச் 27-ம் தேதி நடைபெறுகிறது.

இந்த விருதைப் பெறுவது என்பது உலக அளவில் திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களின் மிகப் பெரிய கனவு என்றே கூறலாம். ஹாலிவுட் படத்தில் பணியாற்றியதற்காக ஏ.ஆர்.ரகுமான், ரசூல் பூக்குட்டி போன்ற இந்திய நட்சத்திரங்கள் ஆஸ்கர் விருதை வென்றிருந்தாலும், இந்திய திரைப்படங்களுக்கு ஆஸ்கர் என்பது எட்டாக் கனியாகவே உள்ளது.நீங்கள் clothes சந்தையில் இருந்தால், எங்கள் தளம் உங்களுக்கான சிறந்த தேர்வாகும்! மிகப்பெரிய ஷாப்பிங் மால்!

இந்நிலையில், இந்த விழாவில் விருது பெற பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் இறுதிப் பட்டியல் நேற்றிரவு வெளியிடப்பட்டன.

இந்த ஆண்டும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றிருந்த சூர்யாவின் ஜெய் பீம், மோகன்லால் நடித்த மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் ஆகிய படங்கள், இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இரண்டு படங்கள் ஆஸ்கர் ரேஸில் இருந்து வெளியேறினாலும், ‘ரைட்டிங் வித் பயர்’ என்கிற ஆவணப்படம் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி உள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ரின்டு தாமஸ் மற்றும் சுஷ்மித் கோஷ் இணைந்து உருவாக்கியுள்ள இந்தப் படம் மொத்தமாகக் கலந்து கொண்ட 138 படங்களிலிருந்து ஷார்ட் லிஸ்ட் ஆன 15 படங்களில் இடம்பெற்றது. பின்னர் அதிலிருந்து தேர்வாகி இறுதிப் போட்டியில் இடம்பெறும் 5 படங்களில் ஒன்றாகப் போட்டியிடுகிறது ‘ரைட்டிங் வித் பயர்’.

இந்த ஆவணப் படம் பீகாரின் சீதாமர்ஹி பகுதியிலும், உத்தரப்பிரதேசத்தின் பண்டா மாவட்டத்திலும் உள்ள ஓரங்கட்டப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, பட்டியலினப் பெண்களால் நடத்தப்படும் ‘கபர் லெஹ்ரியா’ என்ற சமூகப் பத்திரிகையின் எழுச்சியை, உயிரோட்டமான கதையுடன் கூறியுள்ளது. 

இதுகுறித்து இப்படத்தின் இயக்குநர்களில் ஒருவரான சுஷ்மித் கோஷ் கூறுகையில், “இந்திய ஆவணப்படம் ஒன்று ஆஸ்கர் விருதுக்கு தேர்வாவது இதுவே முதல் முறை. இதனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்திய சினிமாவுக்கே இது ஒரு மிக முக்கியமான தருணம். ரைட்டிங் வித் ஃபயர்’ ஆவணப்படம் தலித் பெண் பத்திரிகையாளர்களைப் பற்றியது. வலிமை என்றால் என்ன என்பதையும், இந்தக் கால பெண்களைப் பற்றிய படமாகவும் இது உருவாகியுள்ளது” என தெரிவித்துள்ளார்.