நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் வேறமாறி , அம்மா பாடல் ஏற்கனவே வெளியாகி வைரலான நிலையில் இந்தப் படத்தில் விசில் தீம் வெளியாகியுள்ளது. பில்லா, மங்காத்தா, ஆரம்பம் படங்களுக்கு பிறகு இந்த தீம் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் ஹுமா குரேஷி, யோகி பாபு, புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.