முஸ்லிமாக இருந்துவிட்டு இப்படி செய்யலாமா என நடிகை ஃபரீனாவிடம் விமர்சித்த நபருக்கு ஃபரீனா பதில் எழுதி கொடுத்து இருக்கிறார்.

நடிகை ஃபரீனா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இரண்டு சீசனிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஃபரீனா வெளியிட்ட ப்ரோமோ வீடியோவிற்கு ரசிகர் ஒருவர் திட்டி கருத்து தெரிவித்திருக்கிறார்.

அந்த ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்த ஃபரீனா தன்னுடைய பாணியில் அந்த ரசிகருக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.

இந்த நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பரீனா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.2 மில்லியன் ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய பிரமோ ஒன்றை போட்டு இருந்தார். அதற்கு பதில் அளித்து ஒருவர் மோசமாக எழுதி இருந்த ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து இது என்னுடைய வகையிலான காலை வணக்கம் என்று பதிவிட்டு இருந்தார்.

மேலும் அதனைத் தொடர்ந்து ரசிகர்களின் கேள்விகளுக்கு ஃபரீனா பதில் அளித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு ஒருவர் நீங்கள் முஸ்லிம் தானே தினமும் தொழுகுவீர்கள் அல்லவா, பின்ன ஏன் இப்படி கெடுதல் செய்கிறீர்கள் என்று பதிவிட்டு இருக்கிறார்.

அதற்கு பதில் அளித்த ஃபரீனா, சமூக ஊடகங்களில் இருப்பது, டிவி சீரியல் பார்ப்பது, ஒரு பிரபலத்தை பின்தொடர்வது மற்றும் அவரை கேள்வி கேட்பது எல்லாமே கெடுதல் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. உன்னுடைய பின்புறத்தை சுத்தமாக வைத்து விட்டு என்னிடம் கேள்வி கேள் என்று பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரல் ஆகிறது.