அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று காலை இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த 2 விமானிகளும் உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் மண்டாலா மலைப் பகுதியில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா என்ற ஹெலிகாப்டரில் இன்று காலை 2 ராணுவ விமானிகள் சென்று கொண்டு இருந்தார்கள்.

இந்த நிலையில் நிலையில் அந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதிக்கு சென்ற மீட்புப் படையினர், அதில் பயணித்த 2 விமானிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் இரண்டு ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.