மகாராஷ்டிராவில் உள்ள ஏடிஎம் ஒன்றில் நாம் கொடுத்த தொகையை விட 5 மடங்கு பணம் வந்ததால், ஏராளமான மக்கள் ஏடிஎம் முன்பு குவிந்தனர்.

நாக்பூரை சேர்ந்த நபர் ஒருவர் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு 500 ரூபாய் எடுத்தவருக்கு, 2500 ரூபாய் கிடைத்துள்ளது. அதை பார்த்த நபர் இன்னொரு 500 ரூபாயினை பதிவிட்டுள்ளார். அவருக்கு மீண்டும் ஐந்து 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்துள்ளது.

மகராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் கபர்கேடா நகரில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த இயந்திரத்தில் தான் இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளது.

இந்த செய்தியானது அப்பகுதியில் காட்டுத் தீ போல பரவியதை அடுத்து, ஏடிஎம்-ல் இருந்து தான் பணம் எடுப்பேன் என பலர் அந்த ஏடிஎம்க்கு குவிந்தனர். இதன் காரணமாக ஏடிஎம் வாசலில் கூட்டம் வரிசை கட்ட தொடங்கியுள்ளது.

இந்த செய்தி எப்படியோ காவல்துறையினருக்கு போகவே, காவல் துறையினர் விரைந்து வந்து ஏடிஎம்மினை மூடினர். அதன் பின்னரே வங்கிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகே ஏடிஎம்-மில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாகவே கூடுதலாக பணம் வெளியாகியுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தில் 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. எனினும் இதுவரையில் இது குறித்து வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.