நத்திங் போன் 1 தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும்.
ஒன்பிளஸ்-இன் இணை நிறுவனரான கார்ல் பெய் அவர்களின் தலைமையிலான யு.கே பிராண்டின் முதல் ஸ்மார்ட்போன் லண்டனில் ஒரு மெய்நிகர் நிகழ்வின் மூலம் வெளியிடப்படும் என்றும், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சேனல்கள் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நத்திங் ஃபோன் 1 ஆனது வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்டதாக கூறப்படுகிறது. இது இந்தியாவில் பிளிப்கார்ட் தளம் வழியாக விற்பனைக்கு வர கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் மூலம் இயங்கும். அதே போன்று இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் SoC சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
இந்த புது வகை நத்திங் ஃபோன் 1 ஜூலை 12 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிப்பு வந்தவுடன் பலரின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நத்திங் போனை வெளியிடுவதற்கு ‘ரிட்டர்ன் டு இன்ஸ்டிங்க்ட்’ எனப்படும் மெய்நிகர் நிகழ்வு இரவு 8.30 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்கி அதன் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் வழியாக நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று அறிவித்துள்ளனர். மேலும், நத்திங் என்கிற இணையதளத்தில் நிகழ்வைப் பற்றிய அறிவிப்புகளைப் பெற ஆர்வமுள்ள பயனர்கள் இதற்காக பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டிற்கு முன்னதாக, இங்கிலாந்தை தளமாகக் கொண்ட எலக்ட்ரானிக்ஸ் பிராண்ட் அதன் முதல் ஸ்மார்ட்போன் பற்றிய பல விவரங்களை வெளியிட்டுள்ளது. மிக சமீபத்தில், நத்திங் போன் 1 ஆனது உண்மையான வயர்லெஸ் இயர்பட்கள் போன்ற வெளிப்படையான வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று நிறுவனம் வெளியிட்ட உள் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் SoC சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இது புது வகையான நத்திங் ஓஎஸ்-இல் இயங்க உள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.