இந்திய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்று அசத்தியுள்ளது தென்னாப்பிரிக்க அணி. இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது.
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கே.எல். ராகுலும் துணை கேப்டனாக பும்ராவும் செயல்படுகிறார்கள்.பார்ல் பகுதியில் நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி முதல்முறையாக டாஸில் தோற்றுள்ளது. இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர் அறிமுகமாகியுள்ளார். 4-ம் நிலை வீரராக ஷ்ரேயஸ் ஐயர் விளையாடுவார் என கேப்டன் ராகுல் தெரிவித்தார். இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.
முதல் ஒருநாள் ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணி
கே.எல். ராகுல் (கேப்டன்), ஷிகர் தவன், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர், அஸ்வின், ஷர்துல் தாக்குர், புவனேஸ்வர் குமார், பும்ரா, சஹால்.
தென்னாப்பிரிக்கா அணி
குயின்டன் டி காக்(w), ஜன்னேமன் மாலன், ஐடன் மார்க்ரம், ரஸ்ஸி வான் டெர் டுசென், டெம்பா பாவுமா(c), டேவிட் மில்லர், அண்டில் பெஹ்லுக்வாயோ, மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, லுங்கி நிங்டி
இளம் வீரர்களை கொண்ட இந்தியா, பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் வலுவாக உள்ளது. கேப்டனாக இன்றி, 6 ஆண்டுகளுக்குப் பின், ஒரு வீரராக விராட் கோலி, இன்று களமிறங்குகிறார். அத்துடன், தன் மீதான விமர்சனங்களுக்கு பேட் மூலம் பதிலடி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.