ரெட்மி 10 அறிமுகதிற்கு முன்னதாகவே Mi.com வலைத்தளம் வழியாக ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களும் ஒரு பிளாக் போஸ்ட் வழியாக வெளியானது.
இதோ முழு விவரங்கள்.

ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் அம்சங்கள், விவரக்குறிப்புகள், படங்கள் மற்றும் பிற முக்கிய விவரங்கள் சியோமியின் உலகளாவிய Mi.com இணையதளத்தில், அறிமுகத்திற்கு முன்னதாகவே ஒரு பிளாக் போஸ்ட் வழியாக முன்கூட்டியே வெளியிடப்பட்டது.

தற்போது வெளியான பிளாக் போஸ்ட் வழியாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த சீன நிறுவனம் அறிமுகப்படுத்திய ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் அப்கிரேட்டட் வாரிசு அறிமுகத்திற்கு தயாராக உள்ளது போல் தெரிகிறது.

ரெட்மி 10 விலை, விற்பனை:

ரெட்மி 10 பற்றிய விவரங்களைக் கொண்ட வலைப்பதிவு இடுகையில் அதன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய விவரங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை.

இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் மூன்று வெவ்வேறு ரேம் + ஸ்டோரேஜ் உள்ளமைவுகளில் கிடைக்கும் என்பதை உறுதி செய்தது. அது 4 ஜிபி + 64 ஜிபி, 4 ஜிபி + 128 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல்கள் ஆகும்.

இது கார்பன் கிரே, பெப்பிள் ஒயிட் மற்றும் சீ ப்ளூ நிறங்களில் மேட், சாஃப்ட் மற்றும் க்ளோ பூச்சுடன் கிடைக்கும் என்றும் வெளியான பிளாக் போஸ்ட் உறுதிப்படுத்தியது.

ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் அம்சஙகள், விவரக்குறிப்புகள் (லீக்டு)

– டூயல் சிம் (நானோ) ஆதரவு – ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் – MIUI 12.5- 6.5 இன்ச் Full எச்டி+ (1080 x 2400 பிக்சல்கள்) டாட் டிஸ்ப்ளே- 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்- 20 : 9 திரை விகிதம்- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ G88 SoC – 6 ஜிபி ரேம் – குவாட் ரியர் கேமரா அமைப்பு – 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் – 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் – 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் – 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் – 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா – 64 ஜிபி மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் – பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் – 18W ஃபாஸ்ட் சார்ஜிங் – 9W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு – 5,000mAh பேட்டரி – அளவீட்டில் 161.95×75.53×8.92 மிமீ – எடையில் 181 கிராம்.