தற்போது தொழில்நுட்ப உலகில் மிகவும் அதிகம் பேசப்படும் ஒரு விஷயமாக ChatGPT AI உள்ளது.

இந்த AI கருவி கூகுள் செய்யும் வேலைகளை எல்லாம் சுலபமாக செய்துமுடிக்கும். இந்த கருவி Google தேடல் கருவிக்கு மிகப்பெரும் ஆபத்து என்று பலர் கூறுகிறார்கள்.

இதை உணர்ந்து ஆல்ஃபபெட் இன்க். நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அதேபோன்ற ஒரு AI செயலியை விரைவில் கூகுள் வெளியிடும் என்று அறிவித்துள்ளார்.

OpenAI நிறுவனத்தின் ChatGPT செயலி அறிமுகம் ஆன சில மாதங்களில் 100 மில்லியன் பயனாளிகளை பெற்றது. முன்பு சோதனையில் இருந்த இந்த செயலி இப்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இதை எதிர்த்து இப்போது Google நிறுவனம் அதேபோன்ற AI செயலி ஒன்றை வெளியிடப்போவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய சுந்தர் பிச்சை “கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னதாக கூகுள் நிறுவனம் Artificial Intelligence எனப்படும் AI ஆராய்ச்சியில் இறங்கியது. மேலும் AI உருவாக்கத்தில் சந்தையில் தலைசிறந்த நிறுவனமாக கூகுள் இருக்கிறது.

இதுபற்றி கூறுகையில், கூகுள் நிறுவனம் எல்ஏஎம்டிஏ (LaMDA) போன்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான லார்ஜ் லேங்குவேஜ் மாடல்களை “வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில்” வெளியிடும் என்று கூறியுள்ளார்.

அறியாதோர்களுக்கு எல்ஏஎம்டிஏ (LaMDA) என்பது லேங்குவேஜ் மாடல் ஃபார் டயலாக் ஆப்ளிகேஷன்ஸ் (Language Model for Dialogue Applications) என்பதன் சுருக்கமாகும். ஆகமொத்தம் சாட்ஜிபிடி-க்கு ஒரு தரமான போட்டியாளர் தயாராகி கொண்டிருக்கிறது!

முன்னரே குறிப்பிட்டபடி, சாட்ஜிபிடி அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. சாட்ஜிபிடி-யின் யூசர் பேஸ் (User Base) ஆனது இன்றுவரை உருவாக்கப்பட்ட மிகவும் பிரபலமான நுகர்வோர் ஆப்களை விட மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.

100 மில்லியன் ஆக்டிவ் யூசர்கள் என்கிற எண்ணிக்கையை எட்ட, டிக்டாக் (Tiktok) ஆப்பிற்கு ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் ஆனது!

அதே எண்ணிக்கையை எட்ட இன்ஸ்டாகிராமிற்கு (Instagram) இரண்டு வருடங்களுக்கும் மேல் ஆனது; ஆனால் சாட்ஜிபிடி இரண்டே மாதத்தில் அதை எட்டியுள்ளது!

சாட்ஜிபிடி என்பது ஓபன்ஏஐ (OpenAI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு ஏஐ லேங்குவேஜ் மாடல் (AI language model) ஆகும்.

இது கொடுக்கப்பட்ட இன்புட்டின் (Input) அடிப்படையில், மனிதர்களால் உருவாக்கப்படுவது போன்ற டெக்ஸ்ட்களை உருவாக்கும் திறன் கொண்டது.

அதாவது இந்த ஏஐ லேங்குவேஜ் மாடலானது ஒரு பெரிய அளவிலான டெக்ஸ்ட் டேட்டாக்களில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளதால், இதனால் கேள்விகளுக்கான பதில்களை உருவாக்க முடியும்; நீண்ட டெக்ஸ்ட்களை சுருக்க முடியும், பெரிய பெரிய ஆய்வு கட்டுரைகள் மற்றும் கதைகளை கூட எழுத முடியும்!