70 மில்லியன் ஒளி ஆண்டு தொலைவில் வெடிக்கும் நட்சத்திரம் நாசா வெளியிட்ட வீடியோ…

by | Oct 6, 2020 | உலகம் | 0 comments

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அதன் ஹப்பிள் தொலைநோக்கி லென்ஸ் மூலம் எடுக்கப்பட்ட ஒரு வெடிக்கும் நட்சத்திரத்தின் அதிசய வீடியோவை பகிர்ந்துள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் இன்று நாம் பூமியை தாண்டியும் அதிசயங்களை நிகழ்த்தி வருகிறோம். அந்த வகையில் நிகழ்காலம் மட்டுமல்லாமல் கடந்த கால நிகழ்வுகளையும் NASA கண்டறிந்துள்ளது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அதன் ஹப்பிள் தொலைநோக்கி லென்ஸ் மூலம் எடுக்கப்பட்ட ஒரு வெடிக்கும் நட்சத்திரத்தின் அதிசய வீடியோவை பகிர்ந்துள்ளது.

சில நொடிகளில் அந்த நட்சத்திரம் வெடித்து ஒன்றுமில்லாமல் போவதை இந்த வீடியோ காட்டுகிறது. வீடியோ ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்களில் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான புகைப்படங்களை காட்டுகிறது.

மேலும் நட்சத்திரம் அதனை சுற்றியுள்ள ஒவ்வொரு வான் பொருளிலும் பிரகாசமாக ஜொலிப்பதை காணலாம்.

இது இறுதியில் ஒரு சிறிய புள்ளியாக மாறி பிறகு எதுவும் இல்லாமல் மங்கிவிடுகிறது.

“இந்த வீடியோ தெற்கு விண்மீன் தொகுப்பான புப்பிஸில் 70 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள சுழல் விண்மீன் NGC 2525 ஆல் பெரிதாக்கப்பட்டுள்ளது.

இது நமது பால்வீதியின் அரை விட்டமாக உள்ளது, இதை பிரிட்டிஷ் வானியலாளர் வில்லியம் ஹெர்ஷல் 1791 இல் “சுழல் நெபுலா” என்று கண்டறிந்தார்.

இந்த வெடிக்கும் நட்சத்திரம் ‘Type Ia’ சூப்பர்நோவா என்று அழைக்கப்படுகிறது.

இது 70 மில்லியன் ஒளி ஆண்டுகள் முன்பு நடந்திருந்தாலும், மனிதர்கள் பூமியில் தோன்றாத போது இந்த வெடிக்கும் செயல்முறை நடந்தது.

இந்த நட்சத்திரம் விண்மீன் NGC 2525 லிருந்து வருகிறது, இது பால்வீதியின் பாதி விட்டம் கொண்டது.

வானியலாளர்கள் பொதுவாக பிரபஞ்சத்தின் விரிவாக்க விகிதத்தை அளவிட ஒரு சூப்பர்நோவாவை பயன்படுத்துகிறார்கள்.

Facebook Page

Related Posts

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

Share This