ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் இன்னிங்க்ஸில் இந்திய அணி படு மோசமாக ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 244 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 53 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடத் துவங்கியது. ஓரளவு முன்னிலை பெற்ற இந்தியஅணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 200 முதல் 250 ரன்கள் எடுத்தால் கூட ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தலாம் என ரசிகர்கள் கருதினர்.

இரண்டாம் நாள் இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி ப்ரித்வி ஷா விக்கெட்டை மட்டும் இழந்து இருந்தது. 9 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து இருந்தது. களத்தில் நைட் வாட்ச்மேன் பும்ரா, மயங்க் அகர்வால் இருந்தனர். இந்தியா மீது அனைவரும் நம்பிக்கை வைத்து இருந்தனர்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கியது. பும்ரா 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து புஜாரா டக் அவுட் ஆனார். மயங்க் அகர்வால் 9 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்ததாக ரஹானே டக் அவுட் ஆனார். அனைவரும் கோலி தான் அணியை காப்பாற்ற வேண்டும் என எண்ணி இருந்த நிலையில், அவர் 4 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் சாஹா 4, அஸ்வின் 0, ஹனுமா விஹாரி 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்தியா ஸ்கோர் 15 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த இந்திய அணி, 31 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்தது. மிக மோசமான நிலையில் இருந்தது இந்திய அணி பேட்டிங். அடுத்து ஷமி காயமடைந்த நிலையில் இந்திய அணி 36 ரன்களுக்கு 9 விக்கெட்கள் இழந்து டிக்ளர் செய்தது.
ஆஸ்திரேலிய பந்துவீச்சில் ஹேசல்வுட் 5, கம்மின்ஸ் 4 விக்கெட்கள் வீழ்த்தினர். அவர்கள் இருவரின் பந்துவீச்சில் மொத்த இந்திய அணியும் சரிந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 90 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
0 Comments