தமிழகத்தில் தினசரி கொரோன பாதிப்பு சதவீதம் இன்று கணிசமாக குறைந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 5.44% பேருக்கே தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று 5,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,46,128 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 1,288 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,79,424 ஆக அதிகரித்துள்ளது
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 397 பேருக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அம்மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 36,332 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பில், கோவை மாவட்டத்தின் அளவு 5.62% ஆக உயர்ந்துள்ளது.

இன்று 5,357 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை, 5,91,811ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம், 91.59% ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10,120 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 97087 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 81,41,543 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 5.44% பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
0 Comments