கொரோனா கொசுக்கள் மூலம் பரவுமா? ஆய்வில் வெளியான புதிய தகவல்!

by | Jul 20, 2020 | உலகம் | 0 comments

காற்றினால் கொரோனா வைரஸ் பரவ சாத்தியக்கூறுகள் உள்ளது என்பது தெரிய வந்துள்ள நிலையில், கொசுக்களால் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இந்தப் பரவலைத் தங்கள் நாட்டில் அதிகரிக்கவிடாமல் தவிர்க்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவல் உலகம் முழுவதும் இதுவரை 1,46,40,326 பேரை பாதித்துள்ளது. அதேபோல் கரோனாவில் இருந்து குணமாணவர்களின் எண்ணிக்கை 87,30,348 ஆக உள்ளது.

இந்நிலையில் இந்த வைரஸ் இருமல் மற்றும் தும்மலின் போது வெளிவரும் நீர்த்துளிகள் மூலமும், மூடிய அறையில் உள்ள காற்றின் மூலமும் பரவும் எனக் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் இந்த வைரஸ் கொசுக்களின் மூலம் பரவுமா என்ற கேள்வி நீண்ட நாட்களாக நிலவி வந்தது. இதுகுறித்து பல்வேறு ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் கொசுக்களின் மூலம் கரோனா பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

மேலும், இதுதொடர்பாக அமெரிக்க கன்சாஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரைக் கடித்த கொசு சாதாரண மனிதரைக் கடித்தாலும் அது வைரஸ் பாதிப்பை உண்டாக்காது எனத் தெரியவந்துள்ளது.

Facebook Page

Related Posts

70 மில்லியன் ஒளி ஆண்டு தொலைவில் வெடிக்கும் நட்சத்திரம் நாசா வெளியிட்ட வீடியோ…

70 மில்லியன் ஒளி ஆண்டு தொலைவில் வெடிக்கும் நட்சத்திரம் நாசா வெளியிட்ட வீடியோ…

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அதன் ஹப்பிள் தொலைநோக்கி லென்ஸ் மூலம் எடுக்கப்பட்ட ஒரு வெடிக்கும்...

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

Share This