பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு
சமீபத்தில் டிக்டாக் உட்பட சீன நிறுவனத்தின் மொபைல் செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில் தற்போது பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் லடாக்கில் ஏற்பட்ட இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதல் காரணமாக 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் சீனாவை சேர்ந்த டிக்டாக் உள்ளிட்ட பல செயலிகளை பயன்படுத்த தடைவித்திருந்தது மத்திய அரசு.
Government blocks 118 mobile apps which are prejudicial to sovereignty and integrity of India, Defence of India, Security of State and Public Order: Govt of India
PUBG MOBILE Nordic Map: Livik, PUBG MOBILE LITE, WeChat Work & WeChat reading are among the banned mobile apps. pic.twitter.com/VWrg3WUnO8
— ANI (@ANI) September 2, 2020
தற்போது இதனைத் தொடர்ந்து பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் இந்த தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு ஆகியவை இந்த தடையின் பின்னணியாக உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஆன்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் கிடைக்கக்கூடிய சில மொபைல் பயன்பாடுகளை தவறாகப் பயன்படுத்துவது குறித்து வந்த புகார்கள் அடிப்படையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.
உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் மையமும் இந்த செயலிகளை தடைசெய்ய பரிந்துரைத்தாகவும் அரசு கூறியுள்ளது.
பப்ஜி மொபைல் ஆப் உடன் சேர்த்து தடை செய்யப்பட்டுள்ள மீதமுள்ள 118 ஆப்களின் முழு விபரம் இதோ:



0 Comments