இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ்..!

by | Dec 21, 2020 | உலகம் | 0 comments

இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும், இதன் தொற்றும் தன்மை 70 சதவீதம் அதிகமுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் கொரோனா வைரஸில் புதிய வகை வேகமாகப் பரவிவருகிறது. வளர்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் நேற்று இரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது. புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இதன் தொற்றும் தன்மை 70 சதவீதம் அதிகம் உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அந்நாட்டில் பெரும் அச்சம் எழுந்ததால் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பிரட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளும் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு தடைவிதித்துள்ளன. 

கனடா அரசு முதற்கட்டமாக 3 நாட்களுக்கு பிரிட்டனுக்கான விமான போக்குவரத்தை நிறுத்தி உள்ளது. பல்வேறு நாடுகள் பிரிட்டனுடனான தரைவழி எல்லையை மூடிவிட்டன. 

தென் அமெரிக்காவில், அர்ஜென்டினா, சிலி மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் பிரிட்டனில் இருந்து புறப்படும் மற்றும் பிரிட்டன் செல்லும் நேரடி விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன. ஈக்வடார் நாடும், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பரிசீலித்து வருகிறது.

Facebook Page

Related Posts

70 மில்லியன் ஒளி ஆண்டு தொலைவில் வெடிக்கும் நட்சத்திரம் நாசா வெளியிட்ட வீடியோ…

70 மில்லியன் ஒளி ஆண்டு தொலைவில் வெடிக்கும் நட்சத்திரம் நாசா வெளியிட்ட வீடியோ…

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அதன் ஹப்பிள் தொலைநோக்கி லென்ஸ் மூலம் எடுக்கப்பட்ட ஒரு வெடிக்கும்...

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

Share This