மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று!

by | Aug 2, 2020 | இந்தியா | 0 comments

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் டில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவ்வபோது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், தமக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, அமித் ஷா தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், “தமக்கு கொரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததையடுத்து, மருத்துவர்களின் பரிந்துரைபடி அதனை கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டதில், தற்போது நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று அமித் ஷா கூறியுள்ளார்.

அத்துடன், “கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தாலும் தமது உடல்நிலை சீராகவே இருப்பதாகவும், விரைவில் தாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாகவும்” ஹிந்தியில் வெளியிட்டுள்ள தமது ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானதையடுத்து, அண்மையில் அவருடன் தொடர்பில் இருந்த துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Facebook Page

Related Posts

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

Share This