தோல்வியடைந்தாலும் நடராஜனுக்காக மகிழ்கிறேன் : டேவிட் வார்னர் நெகிழ்ச்சி!

by | Dec 9, 2020 | விளையாட்டு | 0 comments

ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை இழந்திருந்தாலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்காக மகிழ்ச்சியடைவதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமாகி சிறப்பாக ஆடி வரும் தமிழக வீரர் நடராஜனை ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் புகழ்ந்துள்ளார்.

“தோல்வியோ, வெற்றியோ நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் களத்திலும், களத்தைத் தாண்டியும் மதிக்கிறோம். நாங்கள் தொடரை இழந்து விட்டாலும் நடராஜனை நினைத்து என்னால் சந்தோஷப்படாமல் இருக்க முடியவில்லை. அவ்வளவு இனிமையானவர். ஆட்டத்தை மிகவும் நேசிப்பவர்.வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக அணிக்கு வந்து, முதன் முதலில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடியது என்ன ஒரு சாதனை நண்பா. வாழ்த்துகள்!” என்று வார்னர் வாழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடராஜன் இடம்பெற்றிருந்த சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Page

Related Posts

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

Share This