டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஐ.பி.எல்லின் 11-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து, களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் ஆரம்பம் முதலே தடுமாறினர். தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அதன்பின்னர், களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம், ஷிகர் தவனும் ஒரு நாள் போட்டிகள் போல நிதானமாக ரன்களைச் சேர்த்தார். அவர், 34 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ரஷித்கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரிஷப் பன்ட் 28 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார்.
ஆட்டநேர இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை மட்டுமே எடுத்து டெல்லி அணியை தோல்வியைத் தழுவியது. அதன்மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது. ஹைதராபாத் அணி சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
0 Comments