எஸ்.பி.பிக்கு கொரோனா நெகட்டிவ் – வதந்தி என எஸ்.பி.பி சரண் மறுப்பு…

by | Aug 24, 2020 | பொழுதுபோக்கு | 0 comments

பாடகர் எஸ்.பி.பி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவலுக்கு அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மறுப்பு தெரிவித்துள்ளார். 

பிரபல பாடகரான எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த 5ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது.

கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வந்தார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அவர் மீண்டும் நலமுடன் வர வேண்டும் என்று பிரபலங்கள், அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே கொரோனா தொற்றில் இருந்து எஸ்.பி. பாலசுப்ரமணியம் மீண்டு விட்டதாகவும் அவரது உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் அந்த தகவலுக்கு எஸ்.பி.பி சரண் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், தனது தந்தை எஸ்.பி.பிக்கு கொரோனா நெகட்டீவ் என வந்ததாகவும் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் வெளியான தகவல் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவக்குழுவுடன் ஆலோசித்துவிட்டு இன்று மாலை மீண்டும் தகவல் வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Facebook Page

Related Posts

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

Share This